கோவில் சிற்ப வாஸ்துவின் அற்புதங்கள்


தொழில் கடவுள் பிரார்த்தனை

    ஓம் ஸ்ரீதர்மத்தத மானந்த கந்தளம் ஸீரஸ்ஸேவிதம்
    பஜேகம் லோககர்த்தாராம் விஸ்வகமான மவ்யம் Top


ஆலய அங்க அமைப்பு (மனித உடல் அமைப்பு)

    ஆலயத்தில் தெய்வம் உயிர்பெறுவதற்கும் மனித உடலின் அங்கங்கள் (கூடுவிட்டு கூடுபாய முழு உடல் அமைப்பு தேவை) என்பதை உணர்ந்து ஆலய வடிவமைப்பை ரிஷிகளும் தேவதச்சர்களும் ஜப தபத்தால் கண்டறிந்து சிற்பவாஸ்து சக்தி வாய்ந்ததாக மக்களின் பயன்பாட்டுக்கு அருளினார்கள்.

 • தலை.... கருவறை
 • கழுத்து..... அர்த்தமண்டபம்
 • வயிறு..... மஹாமண்டபம்
 • தொப்புள்..... வாஹன்பீடம்
 • துடைப்பகுதி... நூற்றுக்கால் மண்டபம்
 • முன்கால்.... நடைமண்டபம்
 • பாதம் ..... இராஜகோபுரம்
 • கைகள்.... சுற்றுமதில்
 • சிகை (தலைமுடி)...... விமானம்

    இந்த அமைப்பில் மட்டுமே உயிரூட்டமுடியும் என்று உணர்ந்தார்கள். எனவே அங்கம் மிக முக்கியமானதாகியது.

    புதுவாங்கலம்மன் உயிர்பெற முழு அங்கங்கள் நிறைவுப் பெற்றுள்ளதால் முழுச்சக்தியும் பெற்று அருளை அள்ளித்தரும் பெரும்சக்தியாக விளங்குவது உறுதி.Top


ஆலயம் அமைந்த இடஅமைப்பு

    வாங்கல் என்னும் கிராமத்தின் வடமேற்கு திசையில் வேதகங்கா எனும் ஜீவநதியாகிய காவிரி ஆற்றின் தென்கரையில் தென்னை, கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சூழ்ந்த எழில் மிக்கச் தோற்றத்தில் வடக்குப்பார்த்த திருமுகமாகத் தென்வடல் நீளம் 104 அடி 3 அங்குலம் கீழ்மேல் நீளம் 125 அடி 8 அங்குலமாக மொத்தம் 1300 சதுர அடி பரப்பளவில்  சிற்ப எழில்கூடமாக அமைந்துள்ளது.Top


ஆலயக் கருவறையும் மூலஸ்தானம் அதன் சிறப்புகளும்

    கருவறை அங்கங்களில் முக்கிய அங்கம் என்பதால் அதிகமான கணித முறைகளை பின்பற்ற வேண்டும் என்று சிற்பவாஸ்து நூல்கள் கூறுகின்றன முதலில் ஆயாதிகணிதம் கணிக்கவேண்டும் இங்கிருந்துதான் கட்டளையின் பேரில் மற்ற அங்கங்கள் இயக்கப்படுகின்றன.  ஆயாதிகணிதசாரமே உடலின் அங்க அளவுகளாக பரவிவருகிறது.  மற்ற அங்கங்களுக்கு மூலாதாரம் கருவரை என்பதால் மூலஸ்தானம் எனப்பெயர் பெற்றது.Top


ஆயாதி கணிதம் 16 சிறப்பு பலன்கள்

    ஊர்பெயர் வாங்கல் நாமநக்ஷத்திரம் ரோகிணி. சுவாமி பெயர் ஸ்ரீ வாங்கலம்மன், நாமநக்ஷத்திரம் ரோகிணி ஊருக்கும் ஒரே நகூத்திரமாக அமைவது ஒற்றுமையை சேர்க்கும் என்பதால் சிறந்த அமைப்பாகும் என சிற்ப வாஸ்து நூல்கள் கூறுகிறது 9-வது பரம்பரைக்கும் நட்புநீடிக்கும். கருவறை நகூத்திரம் பூசம் என கணித்து இதை அரசு தலைமை ஸ்தபதியார் முத்தையா ஸ்தபதியாரிடமும் கலந்து ஆலோசித்து முடிவுசெய்து ஊருக்கும் சுவாமிக்கும் 6-வது உத்தம சாதகதாரையாக தேர்வு செய்து வாஸ்து கணிக்கப்பட்ட கணிதத்தின்படி கிடைக்கும் நல்ல பலன் தங்குதடையின்றி வேலை துரிதமாக நடைபெறுவதற்கும் அம்மன் விருப்பமாக ஏற்றுக்கொள்ளும் கருவறையாகவும், விபத்து, பலி, ஏற்படாமல் பாதுகாக்கவும், திருப்பணி நிறைவாக, முடிவுபெற்றே ஆகப்பயன்பட கூடியதாகும், இதன் விபரம்:

 1. ஆதாயம் வருமானம் ........................... 8 பங்கு
 2. விரையம் செலவு ......................... 7 பங்கு வரவு செலவுகள் மிச்சத்தைத்தரும்
 3. யோனி ...................... சிம்மம் குலதெய்வப்பெண்கள் சிறப்படைவர்.
 4. வாரம் நாள் .......................... குருவாரம் வியாழன் குருபகவானே நாளானார்.
 5. நக்ஷத்திரம் ........ பூசம் தெய்வசாகித்யக்ஷத்திரம் சிறப்புபலன்
 6. லக்கிணம் .............. கடகம் செல்வம் சேர்க்கும் சிறப்புபலன்
 7. அம்ஸம் .............. தான்யம் விளைச்சல்பெருகி விவசாயம் செழிக்கும்
 8. ஆயுள் ........................... 910 வருடம் இப்பலாபலன் நடைபெறும்.
 9. நேத்ரம் கண்கள் ........... இரண்டும் கண்கள் உடையதால் அம்மனின்பார்வை கடாக்ஷம் முழுமையாககிடைக்கும்.
 10. சூத்ரம் குழந்தைவாரிசு சந்தான அபிவிருத்தி குழந்தை பாக்கியம் விருத்தியாகும்.
 11. திதி முன்னோர்கள் சப்தமி திதி முன்னோர்கள் ஆத்மசாந்தி பெறுவார்கள்.
 12. வம்ஸம் ..................  பிராமிணம் வேதமந்திரங்களுக்கு சிறப்புதரும்
 13. பூதம் பூமி வாஸ்து ........ தேயு மத்திமமா உப்பு உவட்டு மண் பூமி.
 14. யோகம் .............. அமிர்தயோகம் அமிர்தத்தை சுவைப்பதுபோன்றது.
 15. கணம் ............ தேவகணம் தெய்வீகசக்தியை நிலைநிறுத்த ஏற்றது.
 16. தாராபலன் மேல் சொன்னபடி .............. உத்தமதாராபலன் உத்தமம்.

    சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மானசார ரிஷி தேவதச்சன் விஸ்வர்கமா போதித்த சிற்பவாஸ்து கிரந்த எழுத்துக்களால் இருப்பதை இன்றும் காணலாம். பரம்பரை ஸ்தபதிகளிடம் ஓலைச்சுவடியில் எழுதி வைத்திருந்தார்கள் இதற்கு ஆதாரம் ஸ்தபதியிடம் பரம்பரை ஓலை சுவடிகள் இருக்கின்றன. ஆயாதிகணிதப்படி அளவுகள்

 • கருவறை கால்புறவாய் கிழமேல் நீளம்     23 அடி 9 அங்குலம்
 • தென்வடல் நீளம்    11 அடி 0 அங்குலம்
 • அந்தராளம் கழுத்து     3 அடி 3 அங்குலம்
 • அர்த்தமண்டபம்     11 அடி 0 அங்குலம்
 • கல்ஹாரம் உயரம்     13 அடி 7 அங்குலம்
 • ஸ்ரீ மலையாள கருப்பண்ணர் மூலஸ்தானம்    8 அடி 9 அங்குலம் சதுரம்
 • ஸ்ரீ மதுரை வீரசுவாமி மூலஸ்தனம்     10 அடி
 • ஸ்ரீ நம்பியாண்டவர் மூலஸ்தானம்    7 அடி 9 அங்குலம் சதுரம்

ஆகிய பரிவாரக்கோயில்களுக்கு முறையாக ஆயாதிகணிக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.Top


ஸ்ரீ புதுவாங்கலம்மன் மூலஸ்தான சிற்பக் கட்டிடக்கலையின் நுணுக்கங்கள்

    கர்ப்பகிரஹம், அந்தராளம், அர்த்த மண்டபம் இம்மூன்று அங்கங்களும் உபபீட அதிஷ்டம், அதிஷ்டணம், பாதம், பிரஸ்தரம், முகபத்திரம், தேவகோஷ்டம் என்ற வரிவர்க்க அமைப்பின் முழக்கால் வேலை என்கிற சிறப்பு வேலையின் வர்க்கச்சிறப்பு காண்பதற்கு அழகும் பக்திப்பெருக்கும் கிடைக்கப்பெறுவதே நாம் அடையும் பெரும்பயனாகும்.Top


சுற்று திருமதில்

 • தென்வடல் நீளம் - 125 அடி 8 அங்குலமாகும்
 • கிழமேல் நீளம் - 104 அடி 3 அங்குலமாகும்.
 • உயரம் - 14 அடி 3 அங்குலமாகும்.

    அம்மனின் கைகளாக பாதுகாக்கும் கரங்களாக கோயிலையும் கோயில் மக்களையும் பாதுகாக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

    வர்க்கச் சிறப்பு உபபீட கண்டவரியின் கால்களில் கொடிகருக்குகள் அதிஷ்டாணத்தில் பதமஜெகதியில் எனும் வரியில் இலைவரிசை தளிர்முனையுடன் கூடிய அழகுவரிசை குமுதகத்திலே சிறப்புவாய்ந்த சிலம்புகுமுதகம் (அம்மனின் கால்கொலுசு) மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. அதற்கு உள்ளேசிங்கம், முதலை, உடும்பு, கிளிகள் என்று தாரமங்கலத்தின் நுணுக்கத்தை நினைவூட்டும் வகையில் காணலாம். இந்த அமைப்பு அம்மனின் சக்தியை அதிகரிக்கச்செய்யும் வேலையாகும் பாதத்தில் விருத்தம் எட்டுபட்டம் 16 பட்டம் முருக்குத் திரணை போன்ற பலவித அமைப்புகளில் தூண் வடிவங்கள் சிற்பலகூணப்படி செய்யப்பட்டிருக்கிறது கால்களில் 4 அங்குல உயரத்தில் தெய்வத்திரு உருவங்களாக சப்தரிஷிகள் 7, நவதுர்க்கா 9, நவகிரஹம் 9. தமிழகத்தின் ஜீவநதியாகிய காவேரியம்மன் (வற்றாத நீர்வளம் கிடைகிக வேண்டுவது) சக்திவாய்ந்த காளியம்மன் 2, கணபதி 3, முருகன் வகையில் 3, வாங்கலம்மன் ஆயுதங்கள் 4, நாட்டியப் பெண்கள் 5, வள்ளி 1, தெய்வானை 1, பார்வதி அம்ஸம் 3, சரஸ்வதி 1, மஹாமாரியம்மன் 1, சகுந்தலை 1, கண்ணாடி அழகு ஒப்பனைப்பெண் 1, அக்னிதேவர் 1. அர்த்தநாரீஸ்வரர் 1, மஹாலட்சுமி 1, மச்சகன்னி 1, கன்னிமார் 7, அஷ்டநாகங்கள் 8

    வேதங்கள் உருவவடிவத்தில் 4, சங்கர நாராயணர் 1, மோகினி அவதாரம் ஆகமொத்தம் 82 திருமேனிகள் காட்சி தருகிறார்கள் பக்தர்கள் வலம் வரும்போது தங்களையும் அறியாமல் தெய்வப்பார்வையைப் பெற்று புண்ணிய பலனைப்பெறும் சூக்ஷமத்தை நிறுவி இருக்கிறோம்.  இதற்கு முன்னதாக வேறு எந்த கோவில்களிலும் கிடைக்காத சகல பாக்கியத்தையும் பெரும் செல்வத்தையும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நிறுவி இருக்கிறோம் பலன் கிடைப்பது நிச்சயம்.

      அம்மன் மூலஸ்தானத்தில் நிலைக்காமல் கருங்கல்லில் மிக நுணுக்கமான வேறு எங்கும் காணக்கிடைக்காத புதுமையான சிறப்பு சிற்ப வேலைபாடுகள் கொண்டவை 3 அடி அகலகல்லை 5 பட்டகோணவடிவங்களாக்கி மேல்பாகத்தில் விநாயகரையும் அடிப்பாகம் மலர்தூவி வரவேற்கும் வரவேற்பு பெண்ணாகவும் விதானத்தில் 7 நாட்களைக் குறிக்கும் 7 ராஜஸ்தான் சிவப்பு கல்லில் உருண்டுவரும் உருண்டைகள் செய்து இருக்கிறோம் சிற்பங்களின் சிறப்புக்கோவில்களின் வரிசையில் வாங்கலம்மன் கோவிலும் இடம்பெறும் நோக்கமாகும்.

    சிறப்புமிக்க ஆலயங்களுக்கு கருவறையைச் சுற்றி மழைநீர் கிடைக்கவேண்டும் என்ற சிற்பவாஸ்துவின்படி மேல்பாகத்தில் ஜன்னல் வைக்கப்பட்டு நீராழிப்பத்தி மண்டபமாக அமைக்கப்பட்டுள்ளது.

    மூன்றுநிலை விமானம் செங்கல் சிமெண்ட்டால் 24 அடி உயரமும் 72 விமானத்தேவதா சுதை வடிவங்களும் செய்து வண்ணமும் தீட்டப்பட்டுள்ளது விமான அமைப்புகள் யாவும் சோழர் மற்றும் பாண்டியர் கால அமைப்பாகும் மேலும் மயமதம் மானசாரம் எனும் சிற்ப வாஸ்து நூலில் கூறப்பட்டுள்ள கண்ணியங்களைக் கணிதத்தில் குறைபாடு வராரபடி கவனமாக கையாண்டு இருக்கிறோம்.

    ரிஷிகளே ஸ்தபதிகளாகவும் தப ஜப வலிமை பெற்றவர்களாகவும் ஞானமார்க்கத்தில் கண்டறிந்த அனுபவமிக்க சக்திவாய்ந்த நகரம், பட்டணம், அரண்மனை, ஆலயம் ஆகியவற்றை நிறுவிவந்திருக்கிறார்கள் எனவே அவர்களால் இயற்றப்பட்ட நூல்கள் உயிரோட்டமாக விளங்குவதால் வாங்கலம்மன் கோயிலும் உயிர்பெற்று ஜீவிக்கும் என்பது நிச்சயம்.

    தெய்வ அருள்பெற்ற வரம்பெற்ற ரிஷிகளின் சொல்மாறாத அளவில் கோவிலை அமைத்திருப்பதால் தெய்வசக்தி சிறந்து ஞானம்பெருகி செல்வம் குவிந்து நோய் அகற்றி சுகத்தைக்கொடுத்து அருள்பாலிக்கும் அம்மனாகத் தாயாக தெய்வத்தில் வீரமுள்ள தெய்வமாக ஸ்ரீவாங்கலம்மன் எழுந்தருளி அருள்புரிவார் என்பது உறுதி.Top


ஸ்ரீவாரகிகோவிலும் தெய்வத்திருமேனியும் 

    ஸ்ரீ மலையாள கருப்பண்ண சுவாமி மூலஸ்தானம் வாஹனமண்டபத்தில் கிழக்கு பாகத்தில் மேற்குபார்த்தவண்ணம் காட்சித்தருகிறார். மலையாளத்திலிருந்து (கேரளா) ஏழுந்தருளியவர் என்ற காரணத்திற்காக கேரள சிற்பகட்டிடக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து யானைவரிசையும், முகப்புமரத்தூண்களைப்போல் வேலைப்பாடுகளுடையதாகவும் புதுமையாகவும் அழகாகவும் உருவானது. அதன்மேல் ஒருநிலை விமானமும் 8 சுதை சிலைகளும் செய்து வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதுபோல் கேரளச்சிற்பகட்டிடக்கலையை சேர்ப்பதும் சிறப்பு என்பது ஸ்தபதியாரின் யுக்தானுச்சாரபிரகாரம் செய்வதற்கு ஆகமும் சிற்பவாஸ்து நூல்களும் உறுதி கூறுகின்றன.Top


ஸ்ரீ மதுரை வீரசுவாமி மூலஸ்தானமும் திருமேனியும்

    வாஹனமண்டபத்தின் வாயுமூலையில் தெற்குபார்த்தவாறுக் காட்சிதருகிறார். கருவரையைச் சுற்றிலும் 27 நக்ஷத்திரங்களைக்குறிக்கும் வண்ணம் 27-கல் உருண்டைகள் உருண்டுவரும் வண்ணம் செய்திருப்பது சில சக்திமார்க்கங்கள் கிடைக்கப்பெறும் வாய்ப்பு உள்ளதை இரகசியமாகவைத்து தேவையான நேரங்களில் பயன்படுத்தும்படி உருவாக்கியிருக்கிறோம். வேறு எந்த கோவிலிலும் இதுவரை யாரும்செய்யாத சக்திவாய்ந்த விஷயமாக ஸ்தபதியார் வழிபடும் சதாகாலமும் தியானிக்கும் பரபிரம்மம் விஸ்வகர்மனின் வழிகாட்டுதலில் நிறுவியிருக்கிறார். இதன்மேல் ஒரு நிலை விமானமும் 8 சுதைசிலைகளும் செய்து வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.Top


ஸ்ரீ நம்பியண்ணசுவாமி மூலஸ்தனமும் மூலவர் திருமேனியும்

    பாரம்பரிய வழிபாட்டு மானுஷ தெய்வமாக வழிபடுகிறார்கள். வாஹனமண்டபத்தின் மேற்குபாகத்தில் தெய்குபத்தியில் கிழக்கு பார்வையாக காட்சி தருகிறார். இவ்வாறாக மூன்று பர்வாரங்கள் சமேதராய் ஸ்ரீ வாங்கலம்மன் விளங்குவதால் பரிவார தெய்வ சக்திகளுக்கும் மீறிய சக்தியை அம்பாள் முன்வந்து நிறைவேற்றுவார். பரிவாரங்களுடைய தெய்வம் பலமிக்க தெய்வமாக விளங்கும் என்பது பொருளாகும்.Top


மாகாமண்டபம் வயிறு வாகனமண்டபம் துடைப்பகுதி

    ஸ்ரீ அம்பாள் சந்நிதியின் இரண்டுவகை மண்டமும் ஒன்று சேர்ந்து அணிவொட்டிதூண்கள் அமைப்பில் கிழமேல் ஐந்து பத்திகளாகவும், அணிவொட்டி தூண் 14-ம் சித்திரமண்டப தூண் 20-ம் ஆக 54 தூண்கள் சுற்றுமண்டபத்தையும் சேர்த்து நிறுவப்பட்டிருக்கின்றது. மண்டபத்தின் தென்வடல் நீளம் 29 அடி 9 அங்குலமாகவும் கிழமேல் 44 அடி 1 அங்குலமாகவும் முழுவதும் கருங்கற்களினால் அமைக்கப்பட்டுள்ளதாகும். 

    அணிவொட்டி தூண்கள் என்பது சிறப்புவாய்ந்த தூண்களாகும், ஒரே கல்லில் இரண்டு தூண்களாகவும் மதளை, படங்கு, சிம்மம், கொடிவளை, முட்டிபந்தம் நானுதல், மாடகசட்டம், பாவுகல் என்கிற 9 அடுக்குகளை கொண்டதாகும். அத்தனையும் சிற்பத்தொழில்திறனை சிறப்பிக்கும் சிறப்புத்தூண்களாகும். இத்தூண்கள் 81/2 அடிக்கும் 31ய2 அடி முழுக்கல்லாக தேவைப்பட்டதால் காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் என்னும் ஊரிலிருந்து பெரிய கற்கள் கொண்டு வரபட்டு செதுக்கப்பட்டன.  தலைவர் திரு. எம். இரவீஸ்வரமூர்த்தி அவர்களின் அரிய முயற்சியால் இது  செயல்படுத்தப்பட்டது.  வாலாஜாபாத்திலிருந்து கொண்டுவந்த பெரியகற்களில் இரண்டு கற்கள் வேலைக்கு ஆகாமல் போனது மறுபடியும் முயற்சியுடன் கொண்டுவந்து நிறுவியிருக்கிறோம்.

    மண்டபத்தின் சிறப்பு அம்ஸங்கள் ஸ்தபதி யுக்தானுச்சாரப்படி மிகப்பழமைவாய்ந்த ஆலய ஸ்தலங்களில் உள்ள சிறப்பு மிகுந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டு ஒரே மண்டபத்தில் பார்க்க ஏதுவாகவும் தஞ்சாவூர், காஞ்சிபுரம், தாராசும், மாமல்லபுரம், ஜெயங்கொண்ட சோழபுரம், திருமாகரல், அஜந்தா, தில்வார், கேஜீராஹோ, கர்நாடகாவின் பேலூர், போன்ற ஊர்களின் சிற்பங்களை ஞாபகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். இதற்கு முன்னதாக இம்முறையை யாரும் செய்யவில்லை என்பதால் இந்த மண்டபம் மேலும் சிறப்பை பெறுகிறது. மேலும் 54 தூண்களிலும்:

 • நாகர் (சந்தான நாகர்) வகையில் - சிற்பம் - 4 சந்தான விருத்திக்காக
 • குடவரைகல் இரதங்கள் வகையில் - சிற்பம் - 2 (மாமல்லபுரம்)
 • தற்கால பறவை வகையில் - சிற்பம் - 10 (கிளி, கொக்கு, மயில், வ.பூச்சி சேவல், பருந்து, அன்னப்பறவை, புறா)
 • பூஜாயந்திர வகையில் - சிற்பம் - 2 (கல்வி, திருமணதிற்கு வணங்குவது)
 • விலங்கு வகையில் - சிற்பம் - 12 (1தலை 4 உடம்புமான் 3குரங்குகள், அணில், வாகனகுதிரை, யானை 2 வகை, நந்தி 2 வகை ஒட்டகம், சிங்கம், யானையும் நந்தியும் சேர்ந்து சிற்பம் (தாராசுரம்) பல்லவர், யானை, மதுரை நந்தி, ஆடு, குகைப்புலி, வேங்கை, முயல்
 • நாட்டிய வகையில் - சிற்பம் - 16 நாட்டியப்பெண்கள்
 • தெய்வ அவதாரம் - சிற்பம் - 9 ஞானசரஸ்வதி, தான்யலக்குமி, ரதிதேவி, கண்ணாடி, பெண், மச்சகண்ணி மாகாளிதேவி
 • கோலம் வகை - வடிவம் - 3 தமிழ்ப்பெண்களின் பாரம்பரிய கலையை உணர்த்துதல்
 • பூதகணங்கள் - சிற்பம் - 5 பூதங்கள்
 • பூக்களும், கமலங்களும் வகை - 45 வெவ்வேறு புதுமையான சித்தரங்கள்
 • ஆகமொத்தம் - 108வகை அரிய சிற்பவகைகள் நிறைந்து சித்திரக்கலைக் கூடமாக விளங்குகிறது.

    நமது பாரம்பரிய பண்பாட்டுக்கலை மறந்துபோகாமல், அழிந்துபோகாமல் காப்பாற்றுவதற்கும், தமிழ்நாட்டு சிற்பிகளின் கலைத்திறனை உறுதிபடுத்தவும், பல ஆயிரம் ஆண்டுகளாக நிலையாக இருந்து வருங்கால சந்ததியினருக்கு எடுத்து காண்பிக்கும் விதமாக சிற்பங்களை கோவில் மண்டபங்களில் அமைப்பது மரபாகும். 

    இருபதாம் நூற்றாண்டில் இருந்த ஆடை அலங்காரம், அணிகலன்களின் தோற்றம், நடைமுறை பழக்கவழக்க அடிப்படைகள் மூதாதையரின் பக்தி சிரத்தைகளை கணிக்கும் கலையாக அமைக்கப்பட்டிருக்கிறது.Top


இராஜகோபுரம் (அம்பாள் பாதம்)

    தென்வடல் நீளம் 25 அடியாகவும், கிழமேல் நீளம் 27 அடி 3 அங்குலம் கல்லினால் உயரம் அடியாகவும், 4 நூல் ரவைசன்ன பலமுனை உளிவேலையாக அழகுநயத்துடன் செய்து அதற்கு  மேல் ஐந்து அடுக்கு நிலை கோபுரம் செங்கல் சிமெண்ட் 42 அடி உயரமும் கூடியதாக கம்பீரமாக உயர்ந்து நிமிர்ந்து, இராஜாக்களை  வரவேற்க்கும் இராஜகோபுரமாக அமைக்கப்பட்டு உள்ளது. இராஜகோபுரம் இல்லாத கோயில்களுக்கு ரிஷிகளும், சாதுக்களும் இராஜாக்களும் தரிசிக்க வரமாட்டார்கள் என்பது பண்டைய காலத்துப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

    கோயில் நிர்மானப்பணியில் தலைமை ஸ்தபதியாக பணியாற்றிய பிரம்மஸ்ரீ அ.ழ. இராமச்சந்திர ஸ்தபதியார் இதுவரை 683 சிறிய பெரிய கோயில்களை செய்து முடித்து 684-வது கோயிலாக இத்திருப்பணியை செய்திருக்கிறார் கோயில்களையும், நகரங்களையும், சிருஷ்டிக்கும் பொறுப்பை விஸ்வகர்மா எனும் தேவதட்சன் மூலமாக செய்ய வேண்டும் என்ற வேத – ஆகமங்கள் கூறுவது போல் பரம்பரை விஸ்வகர்ம குளத்தில் ஸ்தபதி வம்சத்தில்  தோன்றியவர் இக்கோவிலை செய்திருப்பது சிற்ப இலக்கண சிறப்பு முறையாக விளங்குகிறது.

    தொழில் நுணுக்கம் சிறப்பு அமைப்புகள் உருவாக்கும் திறன்யாவும் சிறப்பாக அமைய பரபிரம்மம் விஸ்வகர்மா தியஸநத்தை தியானித்துக் கொண்டே இக் கோயிலைப் பயபக்தியுடன் செய்திருக்கிறார். கோவிலின் சிறப்பு அம்ஸங்கள் சிறப்பாக அமையவும், விபத்துகளால் பாதிக்காமலும், பெரும் நஷ்டங்கள் ஏற்படாமலும் பாதுகாத்து வழி நடத்திய ஸ்ரீ வாங்கலம்மன் அவருள் ஒன்றி இப்பெரும் சிற்ப கழஞ்சியமாக உருவாக்கம் பெற்றிருப்பதாக உணர்கிறோம் இரவுபகலாக திருப்பணியின் நினைவாகவே நாலரை ஆண்டுகளும் இருந்திருக்கிறார்  புரியாத குழப்பங்கள், தீர்வுகாண முடியாத நாரங்களில் தொழில் கடவுளை தியானம் செய்து தெளிவுபெற்றிருக்கிறார்  இத்தனை வேலைகளையும் வருமானத்தை ஊதியத்தை கணக்கில் எடுத்துகொள்ளும் எண்ணமின்றி தெய்நீக எண்ணத்தில் தரம் உயர்ந்ததாக இருக்கவே அவருடைய மனம் நாடியது. அதன் பலனாய் கோயில் அமைப்பின் தோற்றமும் சிறப்பும் அரியவகையில் உங்கள் கண் முன்னே தோற்றமளிக்கிறது. 

    “முக்கியமாக திருப்பணியில் ஆட்களுக்கும், ஸ்தபதிக்கும், கர்தாக்களுக்கும் பலி சேதம் ஏற்பட்டுதான் திருப்பணிகள் முடிவுபெறுவதி வழக்கம், காரணம் திருப்பணியில் கணித வாஸ்து குறைபாடுகள் ஏற்படும் சமயத்தில் உயிர்ச்சேதங்கள் ஸ்தபதிக்கே ஏற்படுவதை என்னுடைய மூதாதையர்களிடம் பார்த்திருக்கிறேன். இதற்கு உதாரணம்க சமீபத்தில் நடந்த திருப்பணிகளில் சுட்டிகாட்ட விரும்பவில்லை. என்னுடை மேற்பார்வையில் நடந்த மிகப்பெரிய திருப்பணியில் எனக்கு அடுத்த சிற்பியாக இருந்தவரை நான் அறிவுறுத்தியும் அவர் அலட்சியத்தால் குடும்பம் பாதிப்பு அடைந்ததை கண்கூடாக நான் கண்ட உண்மை. ஆகவே இந்தத் திருப்பணியில் அணிவொட்டி தூண்மண்டபம் அமைக்கும் என்னுடைய ஆட்கள் உயிருக்கு ஆயுள்காப்பீடு செய்திருக்கிறேன். முன்னெச்சரிக்கையாக குருதியாகம் செய்து அதன் பலனும் கை கொடுத்தது. மேலும் வாங்கலம்மனும் இக்கோயிலில் விரும்பி அருள்பாலித்ததால் பலிகள் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது உண்மை.”    -  பிரம்மஸ்ரீ அ.ழ. இராமச்சந்திர ஸ்தபதியார்Top


சரித்திரவரலாற்றில் கோவிலின் பங்கு

 • தமிழநாட்டு சிற்பக்கலை சிறப்புகளை எடுத்துக் கூறுவது. 
 • தமிழனுக்கே உரியகலை என்ற உரிமையை தருவது. 
 • சிற்பக்கலையை அழியவிடாமல் வளர்க்கும் திறனை கூறுவது. 
 • வெளிநாட்டிலும் (லண்டன், அமெரிக்கா போன்ற அயல்நாடுகளிலும்) தமிழ்க்கலை எங்கள் நாட்டுக்கலை என அடையாளம் காட்டுவது. 
 • இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த சிற்பக்கலை சிறப்பைக் கூறுவது. 
 • கோவில்களின் வளர்ச்சி எண்ணிக்கையை கூறுவது. 
 • தமிழனின் சிற்பக்கலை இரசனையை கூறுவது.
 • இக்காலகட்டத்தில் வாழ்ந்த ஸ்தபதிகள் சிறப்பை ஓவியர்களைக் கூறுவது. 
 • சிற்பங்கள் மூலமாக மக்களின் பண்பாடுகள் பழக்கவழக்கங்களைக் கூறுவது. 
 • கோவல்கட்டுவதில் எவ்வளவு ஒற்றுமையுடையவர்கள் என்பதைக் கூறுவது.
 • பக்திமார்க்கத்தில் சிறந்து விளங்கியதைக் கூறுவது.
 • மிகக்கடினமான கருங்கல்லில் சிறு உளியைக்கொண்டு மிகப்பெரிய மண்டபங்களையும் செய்து முடிக்கும் ஆற்றலையும் மனோதிடத்தையும் கூறுவது.
 • பொருளாதாரச்சிறப்பைக் கூறுவது.
 • விடாமுயற்சியையும் பெரும் முயற்சியையும் கூறுவது.
 • மரபுவழி பாதைதப்பாமல் கடைபிடிப்பதைக் கூறுவது.

இந்த 15 சிறப்பகளும் வரும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட வரலாற்றுக் குறிப்புகளில் பங்குவகிக்கக் கூடியவையாகும்.Top


ஸ்ரீ வழிவிடும் விநாயகர்

முழுமுதற்கடவுள் விநாயகரை வணங்கி ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்பதால் அனுமதிவழங்கி வழிவிடும் விநாயகராக பெயர்பெற்றார். ஆலயத்தின் முதல் வாசல் இராஜகோபுரத்தின் கிழக்குபாகத்தில் திருமதில் சுவரின் வடக்கே 6-அடி 3-அங்குலம் சமசதுரத்தில் 12 அடி 10 அங்குல உயரம் வரைமுழுவதும் கருங்கல்லால் கட்டப்படுகிறது. 

    இக்கோவிலின் கட்டிட அமைப்பு பல்லவர்கள் காலத்து அமைப்பாகும் பல்லவர்கள் சிற்பக்கலை சோழர், பாண்டியர் சிற்பக்கலைக்கு முற்றிலும் மாறுபட்ட கலையாகும். எல்லோரா குகைக்கோவில்கள் வரை பரவியகலை பல்லவர் கலையே எனவே சிறப்புதரும் வகையில் பல்லவர் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.Top


குதிரைகள்

    இராஜகோபுரத்திலிருந்து வடக்கே 72 அடி இடைவெளி விட்டு 15 அடி நீளம் 5 அடி 6 அங்குல அகலம் 4  அடி 10 அங்கும் உயரம் அளவு பீடத்தின்மேல் 14 அடி உயரக்குதிரைகள் 2 கோவில் சிற்பலக்ஷணப்படி அலங்காரக்குதிரையாக காட்சிதருகிறது. 

    குதிரைக்கு மேற்கில், 7 அடி 5 அங்குல சமசதுரத்தில் 2 அடி 6 அங்குல உயரத்தில், பூடம் கட்டப்பட்டு, சந்தான நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புகளில் வாங்கல் பெருங்குடியாரின் பங்கு

 • தமிழ்நாட்டு சிற்பக்கலைக்கு உயிர் கொடுத்தார்கள்.
 • தமிழனுக்கே உரிய சிற்பக்கலையை வளர்த்தவர்களாகிறார்கள்.
 • தமிழ் கலையை அழிய விடாமல் பாதுகாத்த பெருமைக்குரியவராகிறார்கள்.
 • இன்றைய காலத்தில் வாழ்ந்த நிலையை பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் கூட தெரிவிக்கும் பெருமைக்குரியவராகிறார்கள்.
 • ஸ்தபதி சிற்பி ஓவியர் போன்ற கலைஞர்களை பாராட்டும் பெருமைக்குரியவர்கள்.
 • வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்களே செய்யும் விவேகம் பெற்றவர்கள்.
 • தெய்வபக்தியில் அதீத நம்பிக்கையுடைய பெருமைக்குரியவர்கள்.
 • பொருளாதாரத்தில் சிறந்துவிளங்கி பெருமைக்குரியவர்கள்.
 • ஒற்றுமையிலும் சிறந்துவிளங்கி பெருமைக்குரியவர்களாகிறார்கள்.
 • நிர்வாகத்திறமையுடையவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள்.
 • என்றென்றும் அழியாத புகழையும் புண்ணியத்தையும் பெற்றவர்கள்.
 • வரலாற்றில் சிறப்பு மிகுந்ததாக புது வாங்கலம்மன் கோயில் பங்களிக்கிறது.

Top


கோவில் உருவாக்கம்

 • திருப்பணிக்கு எடுத்துக் கொண்டகாலம் - 4-வருடம், 5-மாதங்கள்.
 • திருப்பணிக்கு வேலைசெய்த நாட்கள் - 1290 நாட்கள்.
 • திருப்பணிக்கு பயன்படுத்திய நாட்கள்  1056 நாட்கள்.
 • திருப்பணிக்கு வேலைசெய்த அதிகபட்ச ஆட்கள் 86 பேர்
 • திருப்பணியில் பயன்படுத்திய உளி எண்ணிக்கை - 4110
 • திருப்பணியில் தேவைப்பட்ட கருங்கல் அளவு - 88 லோடு (3958 கன அடி)

    “இந்த மாபெரும் பணியை செவ்வனே செய்து முடிக்க எனக்கு அருளிய ஸ்ரீ புதுவாங்கலம்மனுக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த திருப்பணி குழுவின் தலைவர் செயலர், பொருளாளர் மற்றும் அனைத்துப் பெருங்குடி குல குடிப்பாட்டு  மக்களுக்கும் என் சார்பிலும் என் மகன் சிற்பு மணிகண்டன் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.“  - பிரம்மஸ்ரீ அ.ழ. இராமச்சந்திர ஸ்தபதியார்.

கோவில் சிற்ப வாஸ்துவின் அற்புதங்கள் - புகைப்படவடிவில்Top