ஸ்ரீ சந்தான நாகர்

ஸ்ரீ சந்தான நாகர்

விக்ரஹ மூர்த்தி

இறையன்புடையீர் 

    நமது குடிப்பாட்டு மக்களும், பிற பக்த பெருமக்களும் உய்யும் வண்ணமும், ஆண் சந்தான பாக்கியம், மக்கட்பேறு பாக்கியம், திருமண பாக்கியம், மாங்கல்யபலம், ஆரோக்கியம், ஆனந்த குடும்ப உறவுமுறைகள், தொழில் அபிவிருத்தி உலக அமைதி, நமது குடிப்பாட்டுக் குலச்செழிப்பு இத்துணை சகல சுபிட்ஷங்களும் கிடைக்க வேண்டி வரும்பியதால் ஜோதிட பூஷன் திரு ஜி. திருஞானசம்பந்தம் அவர்கள் நடத்திய ஆருட் தெய்வ பிரசன்னபடி நமது புதுவாங்கலம்மன் திருக்கோவில் வளாகத்தில் ஸ்ரீ சந்தான நாகர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்ய அம்மன் அருள் கிடைக்கப்பெற்றதை அடுத்து,

    ஸ்ரீ சந்தான நாகர் விக்ரஹ மூர்த்திக்கு வன்னிமரத்துடன் கூடிய ஆலயம் புதியதாக நிர்மானிக்கப்பட்டு  நிகழ்ந்த சர்வதாரி வருடம் ஆனி மாதம் 25-ஆம் நாளான 09.07.2008 புதன்கிழமை வளர்பிறை, சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மிதுன லக்கினத்தில் காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் ஸ்ரீ சந்தான நாகர் விக்ரஹ பிரதிஷ்டை விழா நடைபெற்றது. நமது குடிப்பாட்டு மக்கள் அனைவரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீசந்தான நாகர் விக்ரகமூர்த்தி மற்றும் புதுவாங்கலம்மன் திருவருளைப் பெற்றனர்.