Amman Unjal Paatu

திருவுயர்ந்து வளர்ந்தோங்கும் செய்கள்மேவும்
செம்பொன் நதி கரையறுகில் செய்கோலோச்சும்
செல்வியவள்  பர்வதனின் ம௧ளாம் பாரீர்!
வாங்௧ல் நாயகி மீது வகையானும்
 நவமணிகள் நடைபயின்ற செம்பொன் யாத்த
ஊஞ்சல் ௭னும் தமிழ் பாட உவந்தேன் நானும் 
செப்பரிய திருவுயர்ந்த கரங்கள் ஐந்தும்
தப்பாமல் மதம் மூன்றும் காப்பதாமே.
 
சீர்பெ௫கும் சந்தனத்தால் கால்கள் நாட்டி 
சிறந்த சிறு செண்பகத்தால் விட்டம் போட்டு
பேர் பெ௫கும் வச்சிரத்தால் பலகை சேர்த்து
பேசரிய தங்கச் சங்கிலிகள் பூட்டி
ஏர் பெ௫கும் மரகத்தால் சரங்கள் கோர்த்து
கா௫லவும் நீலத்தால கடையுமிட்டு
பார் பெ௫கும் பெ௫ஙகுடியார சமைத்த ஊஞ்சல்
வாழையெனும் வாங்கல்ம்மன் ஆடி ஊஞ்சல்

அஷ்டதிசை புகழ் பாலனக் கால்கள் நாட்டி
அ௫ள் பெ௫மாமனி வயிர விட்டம் போட்டு 
திட்டமிகும் தாப்பகத்தால் பலகை சேர்த்து
சிறந்த நவமணியாலே கொடுங்கையாக்கி
சட்டமிகும் ரசித்த சஙகிலிகள் பூட்டி
த௫ண நல மணிகளுமே சரங்கள் கோர்த்து
மட்டுலவும் பெ௫ங்குடியார் சமைத்த ஊஞ்சல்
வாழையெனும் வாங்கல்ம்மன் ஆடி ஊஞ்சல்

மணிவயிரத்தால்இழைத்துபலகைசேர்த்து
வச்சிரவைடூரியமே கொடுங்கையாக்கி
பணிபுரியும்பொற்சஙகிலிகள்வடங்கள்பூட்டி
பச்சைநவமணியாலேசரங்கள்கோர்த்து
தனியும் பூச்சக் கரவட்ட குடைகள் சூழ
தவமிகுந்த பெ௫ங்குடி வேளாளர் வாழ
மணியான மனோன் மணித்தர்ப்ப ஆடி ஊஞ்சல்
வாழையெனும் வங்கலம்மான் ஆடி ஊஞ்சல்

தேவர், மறவர், முனிவர் வடந்தொட்டாட்ட
திகழ்வதி, வஷிஸ்டர் சப்தரிஷி  வடந்தொட்டாட்ட
வண்மை புகழ் சித்தர்களும் வடந்தோட்டாட்ட
மாவீரர் பரதரர்கள் வடந்தொட்டாட்ட
கோவிலுயர் மாதவனும் வடந்தொட்டாட்ட
குலத்துயரிந்த பெருங்குடியார் வடந்தொட்டாட்ட
பாரிலுயர் பாவலர்கள் வடந்தொட்டாட்ட
வாழையெணும் வங்கலம்மன் ஆடி ஊஞ்சல்.

ஆரமாய் மறையதனால் கால்கள் நாட்டி
அறிய முனி சாஸ்திரத்தால் விட்டம் போட்டு
பூரணமாய் மணிவரைப் பலகை மீது
புகழமான தாகமத்தின் கொடுங்கை சேர்த்து
காரணமாய் வாசுகியை கயிற்றாக
கங்கை குலப் பெருங்குடியார் கவுரி வீச
வாரணப்பூங் கொங்கை மின்னல் ஆடி ஊஞ்சல்
வாழையெனும் வாங்கலம்மை ஆடி ஊஞ்சல்.

இந்திராணிலக்குமியும் வடந்தொட்டாட்ட
இயல்மிகுந்நாமகளும் வடந்தொட்டாட்ட
மந்திரமிகும்தெய்வரம்பை வடந்தொட்டாட்ட
வரிசையுள்ளதெய்வரம்பை வடந்தொட்டாட்ட
கந்தமிகும் சூழல் மடவார் வடந்தொட்டாட்ட
பைந்தமிழ் சேர் பெருங்குடியார் வடந்தொட்டாட்ட
வாழையெனும் வங்கலம்மன் ஆடி ஊஞ்சல்.

கார்சேர் கொண்டையிற் குச்சங் குழங்கியாட
கருணைமிகும் நெற்றி தனில் சுட்டியாட
பேர் பெரும் கொந்தன் ஓலை குழைகளாட
பெருந்தன மேற்பணிகள் பின்னியாட
வார் பெருகும் நவரத்தின மாலையாட
வண்மை மிகும் பெருங்குடியார் மகிழ்ந்து வாழ
பார்பெருகும்  பூகரர் மாமறைகள் ஒத
 வாழையெனும் வங்கலம்மன் ஆடி ஊஞ்சல்.

 காசி நதி பொன்னி நதி தம்பராவேணி
கங்கைமிகும் சரஸ்வதியும் வைகையாறும்
தேகலவும் கமலை தூங்க பத்ராவதி
சிவகாமி சிவா நதியும் சிறந்த எந்நாளும்
கோங்குமரி மந்தாகினி பதாகினி நிறைந்த
திருமணி முத்தா நதி அலைகள்
பாசமதாம் பொன்னி நதி அலைகள் மோத
 வாழையெனும் வங்கலம்மன் ஆடி ஊஞ்சல்.

தவில் முரசு பேரிகையும் பம்பை நாதம்
சப்தமுடன் நாதஸ்வரம் தித்தியூத
நாவரசு செந்தமிழ் புலவோர் இசைகள் பாட
நாக தரும் தும்புருவார் கீதம்பாட
அவனிதனை ஓரடியாய் ஆனந்தமாயன்
அன்புமிகும் சகோதரியால் ஆனந்த வீரி
பாவுகயறும் பெருங்குடியார் சமைத்த ஊஞ்சல்
 வாழையெனும் வங்கலம்மன் ஆடி ஊஞ்சல்.

அந்தரி ஆனந்தி கௌரிமாரி வீரி
அம்புலத்தில் கல்யாணி ஆனந்தாயி
கந்தரியே துரந்தரியே மெய்ஞான சூழி
சுடரொளியே மெய்ஞான சூலியான
விந்தைபுகழ் விதரிஆனந்தம் ஆடும் தேவி 
விமலிதிரி சூளிய பிசராம சாமி
மந்திரம் சேர் பெ௫ங்குடியார் சமைத்த ஊஞ்சல்
வாழையெனும் வங்கலம்மன் ஆடி ஊஞ்சல்.

சந்திரனும் சூரியனும் தானும் வாழி! 
கதிர் வேதம் ௮ச்சமயம் தானும் வாழி!
இந்திரன் வானவர்கள் இமையோர்கள் வாழி!
இயல் மிகுந்த பெ௫ங்குடி வேளாளர் வாழி!
அனுதினமும்கற்றுணர்ந்தோர்கேட்டோர்வாழி வாழி!
மந்திரமெனப்பாடினவர்வானளாவபுகழ்மேவ
வாங்கல்மகாகாளியம்மைவாழியவே!

- கவியரசர் கம்பர் அருளிப்பாடியது